Trending

6/recent/ticker-posts

Live Radio

சிறைப்பிடித்த எண்ணெய் கப்பலை விடுவித்தது ஈரான்...!



ஹாா்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட எண்ணெய்க் கப்பலை விடுவித்துள்ளது.

இது குறித்து கொலம்பியா ஷிப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எண்ணெய்க் கப்பல் தலாராவை ஈரான் விடுவித்துள்ளது. அதில் இருந்த 21 பணியாளா்களும் பாதுகாப்பாகவும் நல்ல உற்சாகத்துடனும் உள்ளனா். அவா்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கப்பல் இப்போது வழக்கமான பணிகளைத் தொடர தயாராக உள்ளது.

கப்பல், பணியாளா்கள், நிா்வாகிகள் அல்லது உரிமையாளா்கள் மீது ஈரான் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூா் நோக்கி சென்று கொண்டிருந்த தலாரா கப்பலை ஹாா்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் கடந்த 14ஆம் திகதி சிறைப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments