Trending

6/recent/ticker-posts

Live Radio

எதிர்க்கட்சிகளை இலக்காக கொண்டு ஆட்சிக்கு வரவில்லை - பிரதமர் ஹரிணி...!



சட்டம் அனைவருக்கும் பொதுவான வகையில் பாரபட்சமின்றி செயற்படும் போது அதனை ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு என்று எவ்வாறு குறிப்பிடுவது. எதிர்க்கட்சிகளை இலக்காகக் கொண்டு நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை.
 
மக்களை இலக்காகக் கொண்டே ஆட்சிக்கு வந்துள்ளோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பதவி காலத்துக்குள் நிறைவேற்றுவோமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;

அரசாங்கம் ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படுவதாகவும், ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பல கல்வி முறைமையை பலவீனமடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஜனநாயகம் எங்கு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும்.

சட்டம் அனைவருக்கும் பொதுவான வகையில் பாரபட்சமின்றி செயற்படும் போது அதனை ஜனநாயகத்துக்கு விரோத செயற்பாடு என்று எவ்வாறு குறிப்பிடுவது.

பல கட்சி முறைமையை இல்லாதொழிக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. எதிர்கட்சிகளின் செயற்பாடுகளினால் தான் பல கல்வி முறைமை பலவீனமடையும். எதிர்க்கட்சிகளை இலக்காகக் கொண்டு நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. மக்களை இலக்காகக் கொண்டே ஆட்சிக்கு வந்துள்ளோம்.

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து இன மக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.நாட்டின் நிதி நிலைமையை கருத்திற் கொண்டு அனைத்து தரப்பினருக்கும் நிவாரணமளிக்கப்பட்டுள்ளது.

அரச துறை மற்றும் கல்வித்துறை மறுசீரமைப்புக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மக்களுக்கு குறிப்பிடவில்லை. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டு தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.

Post a Comment

0 Comments