Trending

6/recent/ticker-posts

Live Radio

மு.க. ஸ்டாலினுடன் மு.கா தலைவர் சந்திப்பு குறித்து...!



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இன்று (10) திருச்சியிலுள்ள அரச விருந்தினர் மாளிகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின்போது, இரு நாட்டுத் தலைவர்களும் இரு தரப்பு நலன்கள் குறித்த விடயங்களைப் பற்றி ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனிப்பட்ட விஜயமாக இந்தியா சென்றிருந்தபோது இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments