
மஸ்கெலியா, சாமிமலை கார்ட்மோர் வீதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் காயமடைந்து மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா, சாமிமலை – கார்ட்மோர் வீதியில் உள்ள டிசைட் தோட்ட அலுவலகத்திற்கு அருகில் வைத்து இவ் விபத்து நிகழ்ந்துள்ளதுடன் இதில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியின் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.



0 Comments