Trending

6/recent/ticker-posts

Live Radio

பாகிஸ்தான் தலைநகரில் வெடிப்புச் சம்பவம்: 12 பேர் பலி...!



பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றின் வெளியே இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை எனவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments