
அநுராதபுரம் – குருணாகல் வீதியில் அலுத்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி கிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.
காரின் சாரதி காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



0 Comments