
திட்வா புயல் அனர்த்தங்களினால் சேதமடைந்த கிழக்கு ரயில் மார்க்கத்தின் தண்டவாளங்களின் பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 18 நாட்களின் பின்னர் இன்றைய தினம் மீண்டும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 28ம் திகதி தற்காலிகமாக கிழக்கு ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
இதற்கிடையில், கிழக்கு ரயில் பாதையில் மகாவத்தையிலிருந்து கல்ஓயா வழியாக மட்டக்களப்பு வரையிலான சேதமடைந்த பிரிவில் கல்லெல்ல மற்றும் மனம்பிட்டிய இடையேயான பழுதுபார்ப்பு பணிகள் 90 வீதம் நிறைவடைந்துள்ளதாக கிழக்கிற்காக ரயில்வே துறையின் கண்காணிப்பாளர் பொறியியலாளர் நிசால் லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
கல்லெல்ல முதல் மனம்பிட்டிய வரையிலான ரயில் பாதையின் சேதமடைந்த பகுதி பிரதான பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், கல்லெல்ல முதல் மனம்பிட்டிய வரையிலான சேவை ரயில் இன்று முதல் முறையாக இயக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



0 Comments