
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின்படி, வெனிசுவெலாவில் மற்றொரு எண்ணெய்க் கப்பல் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அமெரிக்க கடலோரக் காவல் படையினர் குறித்த கப்பல் சிறைபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுவெலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாகக் குற்றஞ்சாட்டி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போா்’ என்ற பெயரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.
வெனிசுவெலா ஜனாதிபதி மக்துரோவை “போதைப் பொருள் பயங்கரவாதி” என ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், வெனிசுவெலா கடலோரப் பகுதியில் எண்ணெய்க் கப்பல் ஒன்றை அமெரிக்க படை நேற்று முன்தினம் (20) சிறைபிடித்துள்ளது.
வெனிசுவெலா ஜனாதிபதி மதுரோ மீதான அழுத்தத்தை ட்ரம்ப் தொடா்ந்து அதிகரித்துவரும் நிலையில், இரு வாரங்களில் வெனிசுவெலா கடலோரப் பகுதியில் 2ஆவது எண்ணெய்க் கப்பல் இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டுள்ளது.



0 Comments