
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது.
கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து, பதுளை மாவட்டத்தில் 90 பேரும், நுவரெலியாவில் 89 பேரும், குருநாகலில் 61 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 37 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கேகாலை மாவட்டத்தில் 32 பேரும், மாத்தளையில் 28 பேரும், கம்பஹாவில் 17 பேரும், அநுராதபுரத்தில் 13 பேரும், கொழும்பில் 09 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 08 பேரும் அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 04 பேரும், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தலா 03 பேரும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் தலா இருவரும், இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களில் தலா ஒருவரும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



0 Comments