.jpg)
அட்லி இயக்கத்தில் விஜய்யின் கூட்டணியில் வெளியான திரைப்படம் தெறி.
இந்த திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதி மறு வெளியீடு செய்யப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்.
இதனையொட்டி படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
இதனையடுத்து, தெறி படத்தின் வெளியீட்டு திகதியை ஒத்திவைக்க வேண்டும் என்று கலைப்புலி எஸ். தாணுவிற்கு திரௌபதி 2 பட இயக்குநர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வெளியாகவிருக்கும் 'தெறி' திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்குமாறு கலைப்புலி எஸ். தாணுவிடம் வேண்டுக்கோள் விடுத்திருந்தார்.
இந்த பதிவை பகிர்ந்த கலைப்புலி எஸ். தாணு, "புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி" என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், தெறி படத்தின் வெளியீட்டு திகதி தயாரிப்பாளர் தாணு ஒத்தி வைத்துள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து திரெளபதி 2 திரைப்பட குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக படக்குழு அறிவித்துள்ளது.



0 Comments