Trending

6/recent/ticker-posts

Live Radio

பொருளாதார பலத்தை ஆயுதமாக மாற்றுகிறார்கள் கனேடிய பிரதமர்...!




இராணுவ மற்றும் பொருளாதார பலம் கொண்ட நாடுகள், அவற்றை ஏனைய நாடுகளுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தி வருவதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகள், வரி விதிப்பு, தடை விதிப்பது, பொருட்கள் விநியோகத் தொடர்பைத் துண்டிப்பது என தங்களுடைய பலத்தைக் காட்டுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுவரும் உலகப் பொருளாதார மாநாட்டில் உரையாற்றும் போது கனேடிய பிரதமர் மார்க் கார்னி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உணவு, எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் சுய தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நாடுகள், பலம் பொருந்திய நாடுகளின் அழுத்தத்துக்கு ஆளாகுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், பலமிக்க நாடுகளின் நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஏனைய நாடுகள் தள்ளப்படுவதாகவும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments