
கச்சத்தீவு அருகே எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்றொழிலாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை எமது செய்தி சேவைக்கு உறுதிபடுத்தினார்.
கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாகக் கூறி இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன், கடற்றொழிலாளர்களுடன், 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களை காங்கேசன் முகாமிற்கு அழைத்து சென்று கடற்படை விசாரணை நடத்தி வருவதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.



0 Comments