Trending

6/recent/ticker-posts

Live Radio

உரிமைகோராத வெற்றியாளரைத் தீவிரமாகத் தேடும் லொட்டரி நிறுவனம்...!




பிரித்தானியாவில் 10 மில்லியன் பவுண்டுகள் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி ஒருவரை, லொட்டரி நிறுவனம் ஒன்று தேடிக்கொண்டிருக்கிறது.

இங்கிலாந்தின் Bexley என்னுமிடத்தில் உள்ள கடை ஒன்றில் லொட்டரிச்சீட்டு வாங்கிய ஒருவருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது. ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும் அவர் பரிசுப் பணத்தைப் பெற்றுக்கொள்ள வரவில்லை.

பரிசை பெற்றுக்கொள்ள 180 நாட்கள் அனுமதிக்கப்படும் நிலையில், அவர், ஏப்ரல் மாதம் 2ஆம் திகதிக்குள் வந்து அந்த பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகவே, மக்கள் தாங்கள் வாங்கிய லொட்டரிச் சீட்டுகளை சோதித்துப் பார்க்குமாறு லொட்டரி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments