Trending

6/recent/ticker-posts

Live Radio

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய செய்தி ...!





வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பாகத் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் எதிர்வரும் தேர்தல்களில் ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து எமது செய்திச்சேவை தேர்தல்கள் ஆணைக்குழுவைத் தொடர்பு கொண்டு வினவியபோது அதன் அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தினார்.

Post a Comment

0 Comments