நாட்டில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026 ஆம் ஆண்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.
2025 ஜனவரி மாதத்தின் குறித்த காலப்பகுதியில் சுமார் 4,`970 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும், இந்த வருடம் இதே காலப்பகுதியில் 6,521 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி கொழும்பில், 1,627 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)



0 Comments