.webp)
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் குடியேற்றச் சோதனைகளின் போது, ஒரு மாதத்திற்குள் இரண்டாவது அமெரிக்க குடிமகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
37 வயதான தீவிர சிகிச்சைப் பிரிவு செவிலியர் அலெக்ஸ் ப்ரெட்டி, கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
அலெக்ஸ் ப்ரெட்டி ஒரு "உள்நாட்டு பயங்கரவாதி" என்றும், அவர் 9MM ரக துப்பாக்கியுடன் முகவர்களைத் தாக்க முயன்றதால் தற்காப்பிற்காகச் சுட்டதாகவும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
எனினும் அலெக்ஸ் தனது கைபேசியில் முகவர்களைப் படம் பிடிப்பது மட்டுமே தெரிகிறது அவரிடம் துப்பாக்கி இருந்ததற்கான எந்த ஆதாரமும் காணொளியில் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அலெக்ஸ் கையில் துப்பாக்கி ஏதும் இல்லை என்றும், அவர் ஒரு கைபேசியை மட்டுமே வைத்திருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மினியாபோலிஸில் உறைபனியையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அலெக்ஸ் ப்ரெட்டிக்காக நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவுக்கு எதிராக நியூயோர்க், சிகாக்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற முக்கிய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
போராட்டக்காரர்கள் அலெக்ஸிற்கு நீதி வழங்கு மற்றும் ICE பிரிவை ஒழிப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.
Latest News
பருத்தித்துறைக்கு தொழிலுக்கு சென்ற ஹட்டன் இளைஞன் மீது தாக்குதல்: 08 சந்தேகநபர்கள் கைது
Local26 January 2026

அமெரிக்காவில் பதற்றம் - மினியாபோலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் வீதிக்கிறங்கிய மக்கள்
Local26 January 2026

இன்டர்போல் அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தும் ரஷ்யா: கசிந்த ஆவணங்களில் அம்பலம்
Local26 January 2026

போதைப்பொருள் கடத்தல்காரரான வெலிஓயா பிரியந்த மற்றும் அவரது நண்பர் கைது
Local26 January 2026

கத்தோலிக்க அருட்தந்தை மீது தாக்குதல்: 6 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local26 January 2026

வீரர்களுக்கு துரோகம் செய்ததா பங்களாதேஷ் கிரிக்கெட் சபை? வெடித்தது புதிய சர்ச்சை
Local26 January 2026

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - சாதுர்யமாக 80 உயிர்களைக் காத்த சாரதி
Local26 January 2026

காணிகளை நன்கொடையாக வழங்க பொதுமக்களுக்கு அழைப்பு
Local26 January 2026

பெற்றோராகும் கனவு நனவாகிறது! அரச வைத்தியசாலையில் இனி சோதனைக்குழாய் கருத்தரிப்பு சிகிச்சை
Local26 January 2026

இலங்கை அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள்: நாசர் ஹுசைன் சொன்ன அதிரடித் தகவல்!
Local26 January 2026




0 Comments