.jpg)
இலங்கையின் 2025-ஆம் ஆண்டுக்கான மொத்த ஏற்றுமதி வருவாய் 17.25 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டை விட 5.6 சதவீத வளர்ச்சியாகும்.
இதில் சரக்கு ஏற்றுமதி மூலம் 13.57 பில்லியன் டொலர்களும், சேவை ஏற்றுமதி மூலம் 3.67 பில்லியன் டொலர்களும் வருவாயாகக் கிடைத்துள்ளன.
நாட்டின் பொருளாதார மீட்சியில் ஏற்றுமதித் துறை முக்கிய பங்கு வகிப்பதாக இந்த தரவுகள் காட்டுகின்றன.
பொருளாதார ரீதியிலான சவால்களுக்கு மத்தியிலும், ஏற்றுமதி வருவாயில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் நாட்டின் வர்த்தக சமநிலைக்கு வலுச்சேர்ப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது



0 Comments