Trending

6/recent/ticker-posts

Live Radio

சூர்யா 46 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்...!



தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா மற்றும் 'வாத்தி' பட புகழ் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் குறித்த முக்கிய தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பகிர்ந்துள்ளார்.

சூர்யாவின் 46-வது திரைப்படமாக (S46) உருவாகும் இப்படத்தில், மலையாள திரையுலகின் இளம் நட்சத்திரம் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "S46-க்கான குக்கிங் (இசைப் பணிகள்) விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மிக விரைவில் வருகிறோம், விரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும்," எனத் தெரிவித்துள்ளார்.

சூர்யா மற்றும் ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் ஏற்கனவே வெளியான பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments