ரஷ்யாவின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் நாவல்னி மரணத்தில் 'தவளை விடம்' பயன்படுத்தப்பட்டதாக ஐரோப்பிய நாடுகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை கிரெம்ளின் மறுத்துள்ளது.
முன்னதாக, அலெக்ஸி நாவல்னியின் மரணத்திற்குத் தென் அமெரிக்க நச்சுத் தவளைகளிலிருந்து எடுக்கப்பட்ட 'எபிபெடிடைன்' (Epibatidine) எனும் நச்சுப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக ஐந்து ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.
அலெக்ஸி நாவல்னி கடந்த 2024, பெப்ரவரி 16 அன்று ஆர்க்டிக் பகுதியில் உள்ள சிறையில் உயிரிழந்தார்.
இந்தநிலையில், அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எழுந்துள்ள இந்த புதிய சர்ச்சை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், நாவல்னியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் 'எபிபெடிடைன்' நச்சு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தன.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் ஒருதலைபட்சமானவை என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், நாவல்னியின் மனைவி யுலியா நாவல்னாயா சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், "தற்போது உண்மை வெளிவந்துள்ளது, ஒருநாள் நீதி கிடைக்கும்," என்று பதிவிட்டுள்ளார்.




0 Comments