Trending

6/recent/ticker-posts

Live Radio

இலங்கையில் தங்க நிலவரம்...!




இலங்கையில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (05) தங்கத்தின் விலையில் சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, 22 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 1,900 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இன்று 24 கரட் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலையாகக் காணப்படும் நிலையில், ஆபரணத் தங்கத்திற்கான (22 கரட்) தேவை மற்றும் சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக அதன் விலை உயர்வடைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 22 கரட் தங்கம் 356,100 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 385,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,513 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவதால், வரும் நாட்களிலும் உள்நாட்டுச் சந்தையில் விலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நகையக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் விலை அதிகரித்துள்ள அதேவேளை, இந்தியச் சந்தையில் இன்று தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு சுமார் ரூ. 4,640 குறைந்துள்ளது.

அந்தவகையில், அங்கு ஆபரணத் தங்கத்தின் விலை பவுணுக்கு (இந்திய மதிப்பில்) ரூ.4,640 குறைந்து, ஒரு பவுண் ரூ.114,560 க்கும், ஒரு கிராம் ரூ.14,320 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments