அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி வீதத்தை மேலும் ஐந்து வீதத்தால் அதிகரிக்க அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த வரியின் அளவு 15 வீதம் வரை அதிகரிக்கபடவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த உலகளாவிய வரிகளை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது
எவ்வாறாயினும், தற்போதுள்ள சட்டத்தின்படி, 150 நாட்கள் கொண்ட காலப்பகுதிக்கு இவ்வாறு 15 வீதம் வரை வரியை விதிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது
இதேவேளை நேற்று அமெரிக்க ஜனாதிபதி இந்த வரி வீதம் 10% ஆக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் ட்ரம்பின் வரிக் கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரால் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




0 Comments