Trending

6/recent/ticker-posts

Live Radio

செல்லப் பிராணியால் தடைப்பட்ட திருமணம்...!


இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணச் சடங்கின்போது மணமகள் வீட்டு வளர்ப்பு நாய் குரைத்த விவகாரத்தையடுத்து மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயத்தில் இரு வீட்டாரிடையே ஏற்பட்ட வாக்குவாதம்முற்றி, கைகலப்பாக மாறியதையடுத்து மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது

திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மண்டபத்திற்கு சற்றுத் தொலைவில் கட்டப்பட்டிருந்த மணமகள் வீட்டாரது வளர்ப்பு நாய் விடாமல் குரைத்துக் கொண்டே இருந்துள்ளதால் நாயின் சத்தத்தால் சடங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக மணமகன் வீட்டார் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயை அமைதிப்படுத்த முயன்றபோது, மணமகன் வீட்டைச் சேர்ந்த ஒருவர் அந்த நாயை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மணமகள் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட, அது இரு தரப்புக்கும் இடையிலான பெரும் மோதலாக மாறியது.

இச்சம்பவத்தையடுத்து இத்தகைய குடும்பத்தில் வாழ விருப்பமில்லை என்று மணமகள் தெரிவித்ததையடுத்து திருமணம் உத்தியோகபூர்வமாக ரத்து செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments