வீட்டு வேலைகளைக் கணவனும் மனைவியும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், காலங்கள் மாறிவிட்டதால் கணவன்மார் வீட்டு வேலைகளில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மனைவி சரியாகச் சமைப்பதில்லை மற்றும் முறையற்ற நடத்தையில் ஈடுபடுகிறார் என்று விவாகரத்து கோரிய நபர் ஒருவரின் மனுவை விசாரித்த போதே நீதியரசர்கள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அதிரடி கருத்துக்களை வெளியிட்டது.
"நீங்கள் ஒரு வேலையாளைத் திருமணம் செய்யவில்லை, ஒரு வாழ்க்கைத் துணையையே திருமணம் செய்துள்ளீர்கள். சமைப்பது, துவைப்பது மற்றும் சுத்தம் செய்வது போன்ற வீட்டு வேலைகளில் நீங்களும் சமமாகப் பங்களிக்க வேண்டும். இன்றைய காலம் மாறிவிட்டது" என்று நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.
2017 ஆம் ஆண்டு திருமணமான இந்தத் தம்பதியினருக்கு எட்டு வயதில் மகன் ஒருவன் உள்ளான். 2019 ஆம் ஆண்டு முதல் இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். முன்னதாக, கீழ் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்துத் தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதனை எதிர்த்தே கணவன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு, மனுதாரரையும் அவரது மனைவியையும் நேரில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஒத்திவைத்தது.

0 Comments