
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தமை தொடர்பில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள பல வர்த்தக நிலையங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (07) முற்றுகையிட்டது.
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்தமை, விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை மற்றும் ஏனைய நுகர்வோர் சட்டங்களை மீறியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக விரைவில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.



0 Comments