Trending

6/recent/ticker-posts

Live Radio

ஹொண்டுராஸில் ஒரே நாளில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு - 25 பேர் உயிரிழப்பு...!



மத்திய ஆபிரிக்க நாடான ஹொண்டுராஸில் ஒரே நாளில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 25 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (21) டுரிஜிலோ நகரில் உள்ள தோட்டமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தோட்டத் தொழிலாளர்கள் 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று அந்நாட்டின் கொர்டஸ் மாகாணத்தில் ஒமியா நகரில் பொலிஸாரின் வாகனத்தை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பொலிஸார் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 25 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் யார் என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஹொண்டுராஸ் நாட்டில் போதைப்பொருள் கும்பல்கள் அதிகளவில் மோதல்களிலும் வன்முறைகளிலும் ஆயுதத் தாக்குதல்களிலும் ஈடுபடுவது தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில் நேற்று இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments