
தமிழக சட்டமன்றத்தில் நிலவி வந்த அரசியல் இழுபறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை எட்டியுள்ளது.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது நிலவரப்படி விஜய்க்கு ஆதரவான பலம் பின்வருமாறு,
தமிழக வெற்றிக் கழகம் (TVK): 107 எம்.எல்.ஏ-க்கள்
காங்கிரஸ்: 05 எம்.எல்.ஏ-க்கள்
விடுதலைச் சிறுத்தைகள் (VCK): 02 எம்.எல்.ஏ-க்கள்
சிபிஐ (CPI): 02 எம்.எல்.ஏ-க்கள்
சிபிஐ(எம்) (CPI-M): 02 எம்.எல்.ஏ-க்கள்
மொத்தம்: 118
தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதிலும் பெரும்பான்மை இல்லை எனக் கூறி, ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முன்னதாக அழைப்பு விடுக்க மறுத்திருந்தார். இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கோரியுள்ளார்.
அரசியல் பகுப்பாய்வு
இந்தச் சந்திப்பின் போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களை அவர் சமர்ப்பித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விசிக ஆகியவற்றின் இந்தத் திடீர் ஆதரவு, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ஆதரவு வழங்கும் கட்சிகள் தங்களது முடிவை முறைப்படி அறிவிக்க இன்று கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தத் திட்டமிட்டுள்ளன.
ஆளுநரின் முரண்பட்ட நிலைப்பாட்டிற்கு மத்தியில், ஒரே நாளில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் ஒருங்கிணைப்பு தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைய வழிவகுத்துள்ளது.



0 Comments