Trending

6/recent/ticker-posts

Live Radio

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்..!



திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின் தலைமையில் மே 7ஆம் திகதி நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக இன்று (10) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.

''சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் (07) மாலை 5.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின், துணைத் தலைவராக கே.என்.நேரு, கொறடாவாக எ.வ.வேலு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments