
சர்வதேச போதை ஒழிப்பு தினத்திற்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் பிரதான நிகழ்வுகளில் ஒன்றான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்த கொழும்பு துறைமுக நகரிலிருந்து கொள்ளுப்பிட்டி வரையிலான பாதயாத்திரை இன்றைய தினம் இடம்பெற்றது.
போதைப்பொருளற்ற தேசத்தை நோக்கி பெருமமையுடன் முன்னேறுவோம் என தொனிப்பொருளின் கீழ் இந்த பாதயாத்திரை இடம்பெற்றது. போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை அதில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.
அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.



0 Comments