Trending

6/recent/ticker-posts

Live Radio

ஜிம்பாப்வே ரி20 தொடர் - இந்திய அணியில் அதிரடி மாற்றம்...!



ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்கான இந்திய அணியில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

தொடரின் முதல் போட்டி இன்று ( 23) ஹராரே மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை தலைவராக செயல்பட்ட 7 போட்டிகளிலும் வெற்றி பெறாதபோது, இத்தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய முனைப்பு காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இங்கிலாந்து தொடரிலிருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் மற்றும் காயத்திலிருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

இதேவேளை, சர்வதேச ரி20 போட்டிகளில் இதுவரை விளையாடாத 4 புதிய முகங்கங்களான, அசோக் சர்மா யாஷ், தாக்கூர், ஹர்ஷ் துபே, பிரப்சிம்ரன் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விக்கெட் காப்பாளர் சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 6 வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அத்துடன், ஜிம்பாப்வே தொடரில் விளையாவுள்ள இந்திய அணி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே, ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, பிரின்ஸ் யாதவ், யாஷ் தாக்கூர், அசோக் சர்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் காப்பாளர்), ரவி பிஷ்னோய் ஆகியோர் பற்குபற்றவுள்ளனர்.

Post a Comment

0 Comments