Trending

6/recent/ticker-posts

Live Radio

கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் பதற்றம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது...!



கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் 'ஈ' (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

சுமார் 40 பேர் கொண்ட குழுவினருக்கிடையில் இந்த மோதல் மற்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தையடுத்து, சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments