
7,148 மில்லியன் ரூபாய் செலவில் அனுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மன்னார் வைத்தியசாலைகளுக்கான புதிய கட்டடங்களின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) ஆரம்பித்து வைக்கப்படுகின்றன.
இத்திட்டங்கள் நிறைவடடைவதன் மூலம், தூரப்பிரதேசங்களில் வாழும் மக்கள் தங்களது பகுதிகளிலேயே இதய நோய்கள் மற்றும் அவசர விபத்துக்கள் தொடர்பான நிபுணத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதையும் சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (JICA) மற்றும் இந்திய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் இதற்காக செலவிடப்படும் தொகை 7,148 மில்லியன் ரூபாயாகும்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில், சுகாதார அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதற்கமைய, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் 3,545 மில்லியன் ரூபாய் செலவில் 8 மாடிகளைக் கொண்ட முழுமையான அதிநவீன வசதிகளுடன் கூடிய இதய சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதய நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதற்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள், கெத் லேப் (Cath Lab), ஆய்வகங்கள், நூலகம், கேட்போர் கூடம், எக்ஸ்ரே சேவைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் குறித்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையிலும் 8 மாடிகளைக் கொண்ட இதய சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக 2,400 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. அந்த வளாகத்திலும் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 600 மில்லியன் ரூபாய் செலவில் தீவிர சிகிச்சைப் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட நவீன வசதிகளைக் கொண்ட சிகிச்சை அலகு ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் 600 மில்லியன் ரூபாய் செலவில் 4 மாடிகளைக் கொண்ட அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி வளாகத்தின் நிர்



0 Comments