குறிப்பாக எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் பூமியின் ஆழத்திலிருந்து எழும் சூடான பாறைப் பொருள், அங்குள்ள புவித்தட்டுகளின் பிரிவுடன் தொடர்புடையதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தச் செயல்முறை ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதி பிரதான நிலப்பரப்பிலிருந்து எதிர்காலத்தில் பிரிவதற்கு வழிவகுக்கக்கூடும்.
இந்தப் பிளவு தொடர்ந்து விரிவடைந்தால், பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் அப்பகுதியில் புதிய கடற்பரப்பு உருவாகி, புதிய பெருங்கடல் தோன்றும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இது மனித வாழ்நாளில் நிகழக்கூடிய மாற்றம் அல்ல. பூமியின் புவியியல் கால அளவில் பல மில்லியன் ஆண்டுகள் எடுக்கும் மிக மெதுவான மாற்றமாகும்.



0 Comments