Trending

6/recent/ticker-posts

Live Radio

பல மாவட்டங்களில் கடும் வெப்பம் – மக்கள் அவதானமாக இருக்க எச்சரிக்கை...!



வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் நேரங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘அவதானம் செலுத்த வேண்டிய’ மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (03) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (04) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலையால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், நிழலான இடங்களில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இந்த நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக உடல் உழைப்பு தேவைப்படும் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதுடன், வெள்ளை அல்லது இளநிறமான இலகுவான ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments