Trending

6/recent/ticker-posts

Live Radio

கல்வியின் சிறப்பை உறுதிசெய்வதே அரசின் இலக்கு – பிரதமர்...!



கல்வியின் செயற்திறனை உறுதிசெய்வதே அரசின் பிரதான இலக்கு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தொழில் என்பது வெறுமனே தொழிலொன்றை வழங்குவது மாத்திரமல்ல, சிறுவர்களுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆசிரியர் சேவையின் செயற்திறனை பாதுகாத்து உரிய முறைக்கமைய சேவைக்கு இணைத்துக்கொள்வதே அரசின் பிரதான இலக்கு என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான 23,006 ஆசிரியர் பற்றாக்குறைக்கென இலங்கை ஆசிரியர் சேவையின் 3 – 1 அ வகுப்பிற்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் செயறன்முறைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments