Trending

6/recent/ticker-posts

Live Radio

ஐந்து மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை...!



மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (13) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (14) மாலை 6.30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

இதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேற்படி ஐந்து மாகாணங்களின் சில இடங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments