
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 29 ஆம் கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் வேன் ஒன்றுடன் மோதியதில் கார் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரின் முன்பகுதி, முன்னால் பயணித்த வேனின் பின்பகுதியில் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் எவருக்கும் பலத்த காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாதையை மறித்துக் கவிழ்ந்து கிடந்த காரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். அதனைத் தொடர்ந்து வீதிப் போக்குவரத்து வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.



0 Comments