
வைத்திய சேவையின் முதற்கட்டத்தில் அடிப்படை சம்பளம் 73.2 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய அடிப்படை சம்பளமானது 91,750 ரூபா வரை உயர்வடையும். இதுவரைக் காலமும் 52,955க்கு காணப்பட்ட வைத்திய சேவையின் ஆரம்ப அடிப்படை சம்பளம் 2027.01.01 இலிருந்து 91,750 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
இது 73.2 வீத சம்பள உயர்வாகும். அத்துடன் கடந்த 5 வருடங்களில் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் எந்தவொரு அதிகரிப்பும் ஏற்படவில்லை. இதற்கமைய, 5 வருடங்களின் பின்னர் தற்போதைய அரசின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட சம்பள மறுசீரமைப்புடன் வைத்திய சேவையின் அடிப்படை சம்பளம் 91,750 ரூபாவாக அதிகரிக்கின்றது.



0 Comments