தெரணியகல, கல்ஹிட்டிகந்த பிரதேசத்தில் சிறிய கால்வாயில் சிசுவை விட்டு சென்ற 22 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தெரணியகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்ஹிட்டிகந்த பிரதேசத்தில் உள்ள கால்வாயில் உயிரிழந்த நிலையில் சிசுவின் சடலம் இருப்பதாக 119 எனும் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
சிசுவின் மீதான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் 22 வயதுடைய கல்ஹிட்டிகந்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
தெரணியகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments