Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

புளோரிடா மாகாணத்தில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து ; 5 பேர் பலி...!


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

புளோரிடாவின் லிட்டில் டார்ச் கீ கடற்கரையிலிருந்து 50 மைல் தொலைவில் அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு, பலத்த காற்றினால் திடீரென கடலில் கவிழ்ந்துள்ளது.

படகில் 19 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது. அதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

தகவலறிந்து வந்த அமெரிக்க கடலோர காவல் படையினர், நீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 9 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். கடலில் மூழ்கி மாயமான 5 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments