
2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை முன்வைப்பதற்கு வழங்கப்பட்ட காலவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுளளது.
இதற்கமைய இன்றைய தினத்திற்குள் தமது சொத்து விபரங்களை முன்வைக்க தவறும் அரச ஊழியர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறித்த ஆணைக்குழு அனைத்து அரச நிறுவனப பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளது.



0 Comments