Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

”ஆண்களின் விந்தணு உற்பத்தி எண்ணிக்கை 50% குறைந்துவிட்டது” - அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவுகள்...!


கடந்த சில ஆண்டுகளில் உலகளவில் இந்திய உட்பட பல நாடுகளில் ஆண்களின் விந்தணு உற்பத்தி குறைந்து வருவதாக சர்வதேச ஆராய்ச்சி குழு ஒன்று தெரிவித்திருக்கிறது.

விந்தணு குறைந்தால் என்ன ஆகும்?

விந்தணு எண்ணிக்கை என்பது கருவுறுதலை மட்டும் குறிப்பிடுவதில்லை. ஆண்களின் ஆரோக்கியத்தையும் குறிக்கிறது. விந்தணு குறைவது நாள்பட்ட வியாதி, டெஸ்டிகுலர் புற்றுநோய் மற்றும் ஆயுட்காலம் குறைதல் போன்றவற்றுடனும் தொடர்புடையது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த விந்தணு சரிவானது மாடர்ன் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கைமுறையின் உலகளாவிய நெருக்கடியை பிரதிபலிக்கிறது எனவும் கூறுகின்றனர்.

ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

செவ்வாய்க்கிழமை Human Reproduction Update இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் 53 நாடுகளிலிருந்து தரவுகள் பெறப்பட்டது. குறிப்பாக தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்க மற்றும் பிற நாடுகளை சேர்ந்த ஆண்களிடம் 7 ஆண்டுகள் (2011 -2018) இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பாக ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டது. அதில், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆரம்பத்தில் காணப்பட்ட மொத்த விந்தணு எண்ணிக்கைகள் (TSC) மற்றும் விந்தணுக்களின் செறிவு (SC) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டதை அந்த தரவுகள் காட்டுகின்றன. குறிப்பாக, 2000க்கு பிறகே, உலகளவில் TSC மற்றும் SC இல் விரைவான சரிவை இந்த ஆய்வு காட்டுகிறது.



விந்தணு எண்ணிக்கை 50 சதவீதம் குறைவு

”இந்தியாவிலிருந்து அதிக தரவுகள் பெறப்பட்டது (23 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவிலிருந்துதான் அதிக தரவுகள் கிடைத்துள்ளன). அதன்படி, விந்தணுக்களில் வலுவான மற்றும் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதே நிலைதான் உலகளவிலும் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, கடந்த 46 வருடங்களில் உலகளவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக விந்தணு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் சரிவு மிக வேகமாக இருக்கிறது’’ என்கிறார் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹாஹாய் லீவைன்.

விந்தணு எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்கள் இந்த ஆய்வில் கண்டறியப்படவில்லை என்றாலும், கருவில் இருக்கும் போது இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சியில் ஏற்படும் இடையூறுகள், வாழ்நாள் முழுவதும் கருவுறுதல் குறைபாடு மற்றும் இனப்பெருக்க செயலிழப்பு போன்றவற்றை இந்த ஆய்வு விளக்குவதாக கூறுகிறார் லீவைன்.



விந்தணு குறைவதற்கு என்ன காரணம்?

"கூடுதலாக, நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள ரசாயனங்கள் கருவின் வளர்ச்சியை மோசமாக பாதிக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் உணர்த்துவது என்னவென்றால், இதற்கு சீக்கிரம் தீர்வு காணாவிட்டால் மனிதகுலத்தை அச்சுறுத்தும் ஒரு தீவிரமான பிரச்னையை நாம் சந்திக்க நேரிடும். எனவே அனைத்து உயிரினங்களுக்கும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவதோடு, இனப்பெருக்க ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் காரணிகளை குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுக்கிறார் லீவைன்.

தனிப்பட்ட ஆய்வுகள் தேவை

வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப இந்தியாவில் இதேபோல் ஒரு தனிப்பட்ட ஆய்வை நடத்தவேண்டும் எனவும், இருப்பினும் இந்தியாவில் தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்த குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார் லீவைன்.

Post a Comment

0 Comments