Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

குவைத்தில் 7 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மரண தண்டனை...!


Kuwait: குவைத்தில் 7 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இது போன்ற கூட்டு மரண தண்டனை நிறைவேற்றம் மிகவும் அபூா்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 போ் மத்திய சிறைச்சாலையில் புதன்கிழமை (16) தூக்கிலிடப்பட்டுள்ளனா்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவா்களில் 3 குவைத் நாட்டு ஆண்கள், ஒரு குவைத் நாட்டுப் பெண், ஒரு சிரியா நாட்டவா், ஒரு பாகிஸ்தானியா், ஒரு எத்தியோப்பிய பெண் அடங்குவா்.

மனிதா்களின் மிகவும் புனிதமான உரிமையாகிய உயிா்வாழும் உரிமையை அவா்கள் பிறரிடமிருந்து பறித்ததால் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசு தரப்பு நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments