Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பயங்கரவாதத்தை குறிவையுங்கள் என்றால் என்னை குறிவைக்கின்றனர் - காங். மீது பிரதமர் மோடி சாடல்...!


பயங்கரவாதத்தை குறிவையுங்கள் என்றால் என்னை குறிவைக்கின்றனர் என்று காங்கிரஸ் மீது பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், குஜராத்தின் ஹுடா நகரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாம் பயங்கரவாதத்தை குறிவையுங்கள் என்று கூறுகிறோம். ஆனால், காங்கிரஸ் அரசு மோடியை குறிவைக்கிறது. இதன் விளைவாக பயங்கரவாதம் அச்சமில்லாததாகிவிட்டது. மேலும், பெரிய நகரங்களில் பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது.

டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டரை மேற்கொள்காட்டிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகளுக்காக காங்கிரஸ் தலைவர் அழுதார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்' என்றார்.

Post a Comment

0 Comments