Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

கிளைபோசெட் உரம் மீதான தடையை நீக்க தீர்மானம்...!


நெல், சோளம், தேயிலை, இறப்பர் உள்ளிட்ட அனைத்து செய்கைகளிலும் களைகளை அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் கிளைபோசெட்(Glyphosate) உரத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாய பிரதிநிதிகள், விவசாயத்துறை விசேட நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

07 வருடங்களின் பின்னர் Glyphosate உரத்திற்கான தடை நீக்கப்பட்டமையுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களை அழிப்பிற்கான மாற்றுத்திட்டம் வழங்கப்படாமல் 2015ஆம் ஆண்டு Glyphosate உரத்திற்கு தடை விதிக்கப்பட்டமையே அறுவடை குறைந்தமைக்கான காரணமென விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments