Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஜேர்மனிய நகரின் சீன உறவில் முறிவு...!


ஜேர்மனியின் டுயிஸ்பேர்க் நகர் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவியுடன் கூட்டிணைந்த சர்ச்சைக்குரிய ஸ்மார்ட் நகரத் திட்டத்தை நிறுத்தியுள்ளது. ரஷ்யாவுடனான சீனாவின் உறவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டுயிஸ்பேர்கை சம்பிரதாயமான தொழில் நகரத்தில் இருந்த சேவை சார்ந்த ஸ்மார்ட் நகராக மாற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை 2018இல் கைச்சாத்தானது. எனினும் இந்த உடன்படிக்கை கடந்த மாதம் காலாவதியான நிலையில் அது நகர இணைய தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான தற்போதைய உறவு காரணமாக இந்த உடன்படிக்கை உடன் புதுப்பிக்கப்படமாட்டாது என்று நகர அதிகாரிகள் சௌத் சைனா மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளனர்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments