Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரேசிலுக்கு எதிராக ரிசார்லிசன் அடித்த மேஜிக் கோல் - வீடியோ...!

பிரேசில் 2-0 என்று முன்னிலை பெற்றது. ரிசார்லிசன் இந்த அதிசய கோலுடன் இந்த ஆண்டில் பிரேசிலுக்காக 9 கோல்களை அடித்துள்ளார். 

கத்தாரில் நடைபெற்று பிபா உலகக் கோப்பை 2022-ன் குரூப் ஜி போட்டியில் தைரியமாக ஆடிய செர்பியாவை பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இதில் பிரேசில் வீரர் ரிசார்லிசன் 2 கோல்களை அடித்தார். 

இவர் அடித்த இரண்டாவது கோல் அற்புதத்தின் உச்சம். மேஜிக்கல் கோல் என்பார்களே அதுதான் இந்த கோல். இந்த உலகக் கோப்பையின் சிறந்த கோல் என்று இது வர்ணிக்கப்படுகிறது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் களத்தின் இடது புறத்தில் இரண்டு பிரேசில் வீரர்கள் ஒன் டு ஒன் என்று பந்தை எடுத்துச் செல்ல வினிஷியஸ் இடது புறம் பாக்ஸுக்கு வெளியே இருந்து பந்தை உள்ளுக்குள் அடித்தார். 

அங்கு பந்தை கட்டுப்படுத்துவது போல் நின்றிருந்த ரிசார்லிசன் சற்றே காற்றில் எழும்பிய பந்தை இடது காலால் நிறுத்தி அப்படியே சுழன்று படுக்கை வசமாகி வலது காலால் ஒரு உதை உதைத்தார் சற்றும் எதிர்பாராத ஒரு மூவ், பந்து கோலானது. இந்த உலகக் கோப்பையின் ஆகச் சிறந்த கோல் இதுதான். 

பொதுவாக இதுபோன்ற ஷாட்களை பயிற்சியில் அடிப்பார்கள், அல்லது லீகுகளில் அடிப்பார்கள், சீரியசான உலகக் கோப்பைப் போட்டிகளில் அதுவும் கோல் மவுத்தில் வந்து செய்வது பெரும்பாலும் ரிஸ்க் என்று ஆடமாட்டார்கள். ஆனால் ரிசார்லிசன் பயிற்சி எப்படி இருந்திருக்க வேண்டும் என்பது இந்த மேஜிக்கல் ஷாட்டை வைத்து ஊகிக்க முடிகிறது. பிரேசில் 2-0 என்று முன்னிலை பெற்றது. ரிசார்லிசன் இந்த அதிசய கோலுடன் இந்த ஆண்டில் பிரேசிலுக்காக 9 கோல்களை அடித்துள்ளார்.

Post a Comment

0 Comments