Trending

6/recent/ticker-posts

Live Radio

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்று சிக்கிய 17 வயது சிறுவன் உயிரிழப்பு...!


வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சிறுவன் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பிரதேசத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பிலியந்தலை-மாம்பே ஜய மாவத்தையில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அப்போது சிறுவனின் வீட்டில் யாரும் இருக்கவில்லை என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தில் அக்காவும் தந்தையும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், சிறுவனின் சகோதரனும் தாயும் ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

வீட்டில் யாருமின்றி தொலைக்காட்சி இயங்கிக்கொண்டிருந்ததை அறிந்த சிறுவனின் நண்பர் ஒருவர், சந்தேகத்தின் அடிப்படையில் அவரது தந்தைக்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிற்கு விரைந்து சென்று சோதனையிட்ட போது, ​​வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தனது மகன் சிக்கியிருந்ததைக் கண்டுள்ளார்.

குழந்தையை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் மாணவன் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கல்கிஸை குற்றப்பிரிவின் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments