Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



நத்தாரை முன்னிட்டு 309 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு...!

சிறைச்சாலைகளிலுள்ள 309 கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

நத்தார் விசேட பொதுமன்னிப்பின் அடிப்படையில் இந்த 309 பேரும் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளில் 306 ஆண்களும் 3 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதனிடையே, உறவினர்களை சந்திப்பதற்கு கிறிஸ்தவ மத கைதிகளுக்கு மாத்திரம் நாளை அனுமதி வழங்கப்படவுள்ளது.

நத்தார் தினத்தை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.

கைதிகளின் உறவினர்கள் கொண்டுவரும் உணவு ஒரு கைதிக்கு மாத்திரம் போதுமானதாக இருக்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் திருப்பலி ஒப்புகொடுக்கப்படவுள்ளதுடன் கரோல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments