Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

அமெரிக்காவில் பனிப்புயலினால் 62 பேர் பலி…!


அமெரிக்காவில் கடும் பனிப்புயலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சல தினங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல பிராந்தியங்களை கடும் பனிப்புயல் தாக்கியது.

இந்நிலையில், அமெரிக்கா முழுவதும் காலநிலை தொடர்பான சம்பவங்களால் குறைந்தபட்சம் 62 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூ யோர்க்கின் பஃபலோ நகரில் 28 பேர் உயிரிழ்நதுள்ளனர். அந்நகரில் இராணுவ பொலிஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

அந்நகரில் வாகனங்கள் செலுத்துவற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பஃபலோ நகரின் பல பகுதிகளில் சூறையாடல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்பனிப்புயலினால் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை மாத்திரம் 4,800 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதனால், பல்லாயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கியுள்ளனர்.

இதேவேளை, கனடாவில் செவ்வாய்க்கிழமை குறைந்தளவு பனியே பெய்துள்ளது. அங்கு எதிர்வரும் தினங்களில் ஓரளவு சூடான வானிலை எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments