Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஐபிஎல் ஏலத்தை கலக்கவிருக்கும் 6 அன்கேப்டு இந்திய வீரர்கள்!கேரளாவின் கொச்சி நகரத்தில், நாளை 2023ஆம் ஆண்டுக்கான மினி ஐபிஎல் ஏலம் நடைபெறவிருக்கிறது.

நாளை, டிசம்பர் 23 அன்று 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம், கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஏலத்திற்காக அணியில் இருந்து விடுவிக்க நினைக்கும் வீரர்களை விடுவிடுவிக்கலாம் என, ஐபிஎல் நிர்வாகம் அறிவித்த நிலையில், தேவையில்லாத வீரர்களை அந்தந்த ஐபிஎல் அணிகள் வெளியிட்டு இருக்கின்றனர். பல முக்கியவீரர்கள் இந்த மினி ஏலத்தில் இருப்பதால், இந்த வருட ஐபிஎல் ஏலமும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் பல இளம் வீரர்கள் சமீபத்திய தங்களது சிறப்பான ஆட்டத்தால் முக்கிய இடங்களை பிடிப்பார்கள் என்று தெரிகிறது.

இந்திய அணியில் பங்கேற்காத பல வீரர்கள் தங்களது தாக்கத்தை அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும், சிறப்பான ஆட்டத்தால் அறிவித்துள்ளனர். அப்படி கவனிக்கப்படக்கூடிய முக்கியமான சில வீரர்கள் இருக்கின்றனர்.

ஷிவம் மாவி:24 வயதே ஆன ஷிவம் மாவி, 140 கிமீ வேகத்தில் பந்துவீசக்கூடிய பவுலர். புதிய பந்தை ஸ்விங் செய்யும் பவுலராகவும், பவர்பிளேவில் விக்கெட் டேக்கராகவும் சிறப்பாக செயல்படுகிறார். இருப்பினும், காயங்கள் மற்றும் ஃபார்ம் சிக்கல்களால் மாவி பாதிக்கப்பட்டிருந்தார். முந்தைய ஏலத்தில் 7.25 கோடிக்கு அவர் எடுக்கப்பட்டார். ஐபிஎல் மற்றும் உள்நாட்டு அனுபவத்துடன், அவர் உத்தரபிரதேச அணிக்கு முக்கிய வேகப்பந்துவீச்சாளராக இருப்பது, அவருக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் மாவி அவருடைய வாய்ப்பிற்காக, பவுன்சர் மற்றும் யார்க்கர் உட்பட வேரியேசன்களில் மெருகேற்றிவருகிறார். அதே போல் அவரது டெத்-பவுலிங் திறமையும், கவனிக்கப்படக்கூடியதாக உள்ளது.

யாஸ் தாக்கூர்:சமீபத்தில் வளர்ந்து வரும் திறமைக்காக அடிக்கடி பேசுபொருளாக இருக்கும் ஒரு பெயர் யாஸ் தாக்கூர். விதர்பா அணியின் வேகப்பந்துவீச்சின் முக்கிய பவுலராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது அபாரமான பந்துவீச்சு திறமையால் ஈர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டிரோபி அவருக்கு சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. சையத் முஷ்டாக் அலி டிரோபியில், அவர் 10 போட்டிகளில் 7.17 எகானமி ரேட்டில் 15 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 24 வயதை எட்டவிருக்கும் தாக்கூர், நெட் பவுலராக பலமுறை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார், மேலும் அவர் சமீபத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு பகுதியாக இருந்தார்.

என் ஜெகதீசன்:ஸ்டம்புகளுக்குப் பின்னால் MS தோனி இருந்ததால், சென்னை சூப்பர் கிங்ஸில் ஜெகதீசனுக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. மேலும் அவரை 20 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருந்த போதிலும், ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணி அவரை விடுவித்துள்ளது. 27 வயதான ஜெகதீசன், ஸ்லோ இன்னிங்ஸ் விளையாடக்கூடியவர் என்ற பெயரை சமீபத்தில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் மாற்றி காட்டியுள்ளார். சமீபத்திய விஜய் ஹசாரே டிராபியின் போது அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஐந்து சதங்களை அடித்து சாதனை படைத்தார். தொடர்ந்து 5 சதங்களை அடித்த உலகின் ஒரே பேட்டர் என்ற சாதனையை தட்டிச்சென்றார். விருத்திமான் சாஹாவுக்குப் பிறகு இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பரைத் தேடும் ஐபிஎல் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், அவர் ஏற்கனவே சோதனை முயற்சியில் உள்ளார்.

சன்விர் சிங்:பஞ்சாபிலிருந்து வரும் சீம்-பவுலிங் ஆல்ரவுண்டர் சன்விர், அவருடைய சமீபத்திய காலங்களில் வலுவான உள்நாட்டு ஆட்டங்களால் ஈர்க்கப்பட்டுள்ளார். ஸ்விங் மற்றும் துல்லியமான பந்துவீச்சு ஆகியவை பந்துவீச்சில் அவரது மிகப்பெரிய பலமாக உள்ளது. அத்துடன், பேட்டிங்கில் கீழ்-வரிசையில் இறங்கும் அவர் அதிரடியான ஆட்டத்தை வழங்குகிறார். சையத் முஷ்டாக் அலி டிராபியில், அவர் 205.17 ஸ்ட்ரைக் ரேட்டில் மூன்று இன்னிங்ஸ்களில் 119 ரன்கள் எடுத்தார். அவர் போட்டியில் அதிகம் பந்துவீசவில்லை என்றாலும், விஜய் ஹசாரே டிராபியின் போது அவர் தனது திறனைப் வெளிக்காட்டினார். அங்கு அவர் 156 ரன்களுடன் ஐந்து ஆட்டங்களில் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாத போதிலும், 26 வயதான சன்விர் சென்னையில் பயிற்சி பெற்று லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒரு ஆல்ரவுண்டராக கவனிக்கப்படும் ஒருவீரராக மாறியுள்ளார்.

முகேஸ் குமார்:வங்காளத்தைச் சேர்ந்த 29 வயதான வேகப்பந்து வீச்சாளரான முகேஷ், இந்தியா ஏ தொடரில் (நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்திற்கு எதிராக) சிறப்பான ரன்களைப் பெற்றுள்ளார். செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் ஒரு பகுதியாகவும் இருந்தார். இதுவரை ஐபிஎல்லில் இடம்பெறாமல், உள்நாட்டு போட்டிகளின் ரிசல்டுகள் மூலம் இந்த அளவிற்கு முன்னேறியிருப்பது மிகவும் கவனிக்கப்பட கூடியவாராக மாற்றியுள்ளது. பல வேரியேசன்களை நேர்த்தியான கட்டுப்பாட்டில் வீசுவதற்கு பெயர் பெற்ற முகேஷ், நல்ல லென்த் அடித்து, பேட்டர்களை டெக்கிற்கு வெளியே நுட்பமான விலகல் மூலம் ஏமாற்றுகிறார். அவர் கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் நெட் பவுலராக அழைக்கப்பட்டார், ஆனால் கோவிட் -19 காரணமாக அவர் வாய்ப்பை தவறவிட்டார். சமீபத்திய சையத் முஷ்டாக் அலி டிராபியில், ஒடிசாவை 86 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய மூன்று விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார்.

ஆகாஷ் வசிஷ்ட்:மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்ற விருப்பமுடன் இருக்கும் ஒரு வீரர். சையத் முஷ்டாக் அலி டிராபியின் இறுதிப் போட்டிக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தை எடுத்து சென்றதில், ஆகாஷ் வசிஷ் ஒரு சிறப்பான பங்கைக் கொண்டிருந்தார். மிடில்-ஆர்டர் பேட்டிங் ஆடிய அவர் ஒரு பினிஷராக தடையின்றி மாறினார். டி20 போட்டியில் ஹிமாச்சலுக்காக அவர் 163.63 ஸ்ட்ரைக் ரேட்டில் 216 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இடது கை சுழற்பந்து வீச்சிலும் சிறப்பாக பந்து வீசினார். 

வங்காளத்திற்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டிராபி காலிறுதிப் போட்டியில் கடினமான சூழ்நிலையில் அவர் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். 200 ரன்களை துரத்துவதில் 42 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.

Post a Comment

0 Comments